முறை செய்து காப்பாற்றும் மன்னவன்,
மக்களுக்குக் இறையெனக் கருதப்படுவான்.
(குறள் பொருள்: தம் மக்களுக்கு துன்பம் ஏற்படாமல் காக்கும் தலைவர்
மன்னர் என்றாலும், அவர் கடவுளாகப் போற்றப்படுவார்.)
கொள்கைகள்
சாதிவாரியான கணக்கெடுப்பை தமிழக அரசிடம் வலியறுத்துவது.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, கூட்டுறவு வங்கி மற்றும் தனியார் வங்கிகளில்
விஸ்வகர்மா இனத்தைச் சேர்ந்த நகை மதிப்பீட்டாளர்களை அரசு ஊழியர்களுக்கு
இணையாக நியமித்து அரசின் சலுகைகள் கிடைக்கச் செய்ய
மத்திய மற்றும் மாநில அரசை வலியுறுத்துவது.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் ஆலயங்களில்
விஸ்வகர்மா சமூகத்தைச் சேர்ந்தவர்களை அறங்காவலர்களாக
நியமிக்க அரசை வலியுறுத்துவது.
தொழில் சார்ந்த சமூக மக்களுக்கு அறக்கட்டளை ஆரம்பித்து
மருத்துவம், அறிவியல், காவல்துறை, விஞ்ஞானம் போன்ற துறைகளில்
நம் இனத்தவரின் முன்னேற்றம் ஏற்படுத்துவது.
ஆண்டுதோறும் செப்டம்பர் 17ஆம் தேதி
விஸ்வகர்மா ஜெயந்தியை அரசு அளவில் கொண்டாட
அரசை வலியுறுத்துவது.
கூட்டுறவு கடன் சங்கம் (விஸ்வகர்மா வங்கி) ரிசர்வ் வங்கி உதவியுடன்
தர மேம்பாடு செய்து சமூக மக்களுக்கு எளிமையான கடன் வழங்க
அரசை வலியுறுத்துவது.
விஸ்வ தமிழ் கழகத்தின் வரவு செலவுகள் கணினி மயமாக்கப்பட்டு
வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்தப்படும்.
உறுப்பினர் சேர்க்கையும் கணினி மயமாக்கப்படும்.
பாரம்பரிய தொழில் வல்லுனர்களுக்குப் பாராட்டு சான்றிதழ்கள்
வழங்கி கௌரவிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சமூக நீதி மற்றும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில்
கட்சியின் செயல்பாடுகள் அமைந்திருக்கும்.